மட்டக்களப்பில் த.தே.ம.முன்னணியின் ஏற்பாட்டில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!

மட்டக்களப்பில் இன்று(14) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்  செஞ்சோலை படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு  மட்டக்களப்பு மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிறிலங்கா  விமானப் படை நடாத்திய தாக்குதலில் 52 சிறுவர்கள் உட்பட 61 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

இந் நினைவு நாளையொட்டி மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி.சுரேஸ், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜெகநீதன் உட்பட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் நினைவேந்தல் சுடரேற்றப்பட்டு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மௌனப்பிரார்த்தனையும் இடம்பெற்றது. மேலும் மட்டக்களப்பு கொடுவாமடுவிலுள்ள முன் பள்ளி பாடசாலையொன்றின் ஆசிரியருக்கு நிதியன்பளிப்பும் வழங்கி வைக்கப்பட்டது.
#T.N.P.F   #Batti   #sensollai  #deth61   #srilanka   #Tamilnews  

No comments

Powered by Blogger.