சிறைச்சாலையில் என் கணவனை பார்க்கப் போகிறேன்!

 ** பிரபாஅன்பு**
இன்று என்மனம் மகிழ்வில் திளைத்துப்போய் இருந்தது.எப்படா என்கணவனைப் பார்ப்பேன் என்று என்மனம் பரிதவித்துப்போயே
இருந்தது,இன்று இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து 8 மணி பஸ் எடுத்தால் எப்படியும் நாளைகாலை 5 மணியளவில் கொழும்பில் இறங்கி காலி பஸ் எடுத்துத்தான் என் கணவன் இருக்கும் பூசா சிறைச்சாலைக்கு செல்லமுடியும்,
என் மகன்தான் என்னை யாழ்ப்பாண பஸ்ராண்டில் கொண்டுவந்து இறக்கிவிட்டுப்போனான்,என் மகனை வீட்டிற்கு போனதும் கோல் எடுக்கும்படி சொல்லிவிட்டு பஸ்சிற்குள் ஏறினேன்,
எல்லாமே முதலே புக்கிங்காகி இருந்தபடியால் சீற் இல்லாமல் இருந்தது,நின்றபடி எப்படிபோவது என்று நினைத்தபடி இருக்கும்போதுதான் ஒருவர் இடம் தந்தார்.தமிழர் என்றால் பறவாயில்ல உதவியா இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்,
ஏனெனில் இங்கிருந்து இராணுவம் பொலிஸ் கடற்படைகாறர் லீவில் போவார்கள் அதிகளவில்,ஏதோ என் நல்ல காலம் ஒரு தமிழர் வந்தார் என்று எண்ணினேன்.
பஸ் வெளிக்கிட்டது ஏதேதோ நினைவுகள் வந்துபோய்க்கொண்டிருந்தது,என் கணவனை நான் ஆறு மாதத்திற்கு ஒருதடவையே போய் பார்த்துவிட்டு வருவேன்.இங்கிருந்து கொழும்பு சென்றுவருவதாக இருந்தால் மூன்று நாட்கள் தேவை,றூம் காசு. எனது பயணசெலவுகள் சாப்பாட்டு செலவுகள் என்று ஏகப்பட்ட செலவு,அதனால போகும் போது பஸ்சில்போய் வரும்போது றெயினில் வருவேன்,
பஸ்சிற்கு 850 ரூபா றெயின் என்றால் 350 ரூபாவோட கொழும்பில இறங்கலாம்.எனக்கு றெயினில்போகத்தான் விருப்பம் ஆனாலும் போகும்போது பஸ்சில்போவன்.பாதுகாப்புக்கருதி,,பஸ்சும் வெளிக்கிட்டது
."யாரோடு யார் என்ற கேள்வி விதிவந்து விடைசொல்லுமா"
என்ற நல்ல இனிமையான பாடலும் என் மனம்போல் ஒலித்தபடி இருந்தது,இந்த விதி என்ற ஓர் ஒற்றைச்சொல்லால் எத்தனைபேர் வாழ்வு மொட்டிலயே கருகிப்போய்கிடக்குது,மகிழ்வானஅந்த மூன்றுமாத வாழ்வின்பின்பு இன்றுபல வருட நரகவாழ்க்கையை அனுபவிக்கிறேன்...........
என் புருசோத்மன் காணாமல்போய் 18 வருடங்களாகியவிட்டது, இருவரும் காதலித்துத்தான் திருமணம் செய்தோம்,புருசோத்மன் குடும்பத்தவர்கள் மிகவும் வசதியான குடும்பம்,ஒரு அக்காவைத்தவிர எல்லோரும் வெளிநாட்டில்தான்,எங்கள் வீட்டில் அப்பா உழைச்சுத்தான் எல்லாமே,அப்பாவின் நாளாந்த சம்பளத்தோடே எங்கள் குடும்பம் நகர்ந்துகொண்டிருந்தது.
எனக்கு கீழ்த்தான் இரண்டு தங்கை ஒரு தம்பி,நாங்கள் இருவரும் உயர்தரம் படிக்கும்போதே காதலித்தோம்,இவ்விடயம் சில நண்பர்கள் ஊடாக புருசோத்மன் குடும்பத்தவர்களிற்கு தெரியவர அவனை வெளிநாட்டிற்கு அனுப்பமுயர்ச்சி எடுத்தார்கள்.என்மீதான காதலால் அவன் போகாம என்னை திடீர் திருமணம் செய்துகொண்டான்,
இதை அவன் குடும்பத்தினர் விரும்பாமல் பல வழிகளில் என் வாழ்க்கையில் இருந்து அவனை பிரிக்க பலமுயர்ச்சிகள் செய்தார்கள்,அன்றுபோய் எடுத்த வாடகைவீடுதான்,இன்று வரை ஒவ்வொரு மாதமும் 15ஆம் திகதிஅன்று வாடகைப்பணம் கட்டியே ஆகனும்,
திருமணம் செய்து நான் வாழ்ந்த மகிழ்வாக வாழ்ந்த நாட்களைவிட கண்ணீர் ஆறாய்பாய்ந்த நாட்களே அதிகம் எனலாம்,என்னாலதான் புருசோத்மன் காணாமல் போனான் என்றுதான் அவன் குடும்பம்என்னில்போட்டபழி,
என்ன செய்யமுடியும் என்னால்.....?பெத்தவர்கள் உடன் பிறந்தவர்களும் சொல்கிறார்கள்,எனக்கு அறியா வாயசு நானும் பழிகாரியானேன்,
எனக்கு பத்தொன்பது வயது திருமணம் செய்யும்போது.சிறுவயதில் திருமணம் செய்ய விருப்பமில்லாவிட்டாளும் மனதுக்கு பிடித்தவனோடு வாழ ஆசைப்பட்டு திருமணம் செய்தேன். அதனால் பழிகாரியானேன்.
எங்கள் இருவரின் அன்பின் சாட்சிக்கு கிடைத்த பரிசுதான் என் மகன் றொபின்சன்.நான் மூன்றுமாத கர்ப்பமாக இருக்கும்போதுதான் அந்த துர்பார்க்கிய சம்பவம் நிகழ்ந்தது.
வேலையால் வந்த புருசோத்மனிடம் எனக்கு கொத்துறொட்டி வாங்கிதரசொல்லி கேட்டேன்,கர்ப்பமாக இருப்பவளின் ஆசைக்காக உணவு வாங்கிவர சென்றபோதுதான் சாவகச்சேரி கல்வயல் பகுதியில் வைய்த்து இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டான்,
தகவல் அறிந்து ஓடினேன்,என் கணவனை விட்டுவிடும்படி எவ்வளவு கெஞ்சினன்,என் பாசை அவனுக்கு புரியவில்லை,என்கண்ணீருமா புரியல..?ஈனபிறவிகளுக்கு என் அன்பு பாசம் எங்கே புரியப்போகுது,.,.?என் ஆசைக்காதல் கணவனிடம் நான் கொண்ட அன்பு பாசத்தை அவர்களிற்கு எடுத்தியம்பும் முயற்சியில் தோற்றேபோனேன்.என் மகன் வயிற்றில் வந்திருக்காவிட்டால் அன்றேநான் இறந்திருப்பேன்,
பிறக்கும்போது ஆரம்பிக்கின்ற கண்ணீர் இறக்கம் வரை பல பெண்களிற்கு நிற்பதில்லை,அதில் ஒருத்தியாய் நானும் இன்றுவரை தாளாத வாலிகளோடு கண்ணீர்தான் என் வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,
புருசோத்மன் போனதில் இருந்து அவனின் உறவுகள் என்னை கொலைகாரியாக சித்தரித்தது.ஏற்றுக்கொண்டேன் அவர்கள் பெற்றவர்கள் வலியில் கூறுகிறார்கள் என்று,
அன்றில் இருந்து என் மகனிற்காக வாழத்தொடங்கினேன்,ஆயிரம் வலிகளோடு,......இன்று என் பிள்ளைக்கு 18வயது.கணவனின் குடும்பம் சார்பில் இன்றுவரை ஒருவர் அவனைபார்க்க வரவில்லை,.அவர்கள் பணத்திற்கு அடிபணிய நான் விரும்பவும் இல்லை,
என் மகனை வயிற்றில் வைய்த்துக்கொண்டே மிக்சர் கெம்பனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்து உழைச்சே நான் வாழ்ந்தவள்,ஆசைப்பட்டவனிற்கு வாழ்க்கைப்படலாம்,ஆனால் ஆசைப்பட்ட வாழ்க்கை பலரிற்கு கிடைக்காது என்பதை புரிந்துகொண்டேன்,
எனக்கு பாடசாலை காலத்தில் இருந்து என்னை நன்றாக புரிந்துகொண்ட தோழி ஒருத்தி இருந்தாள்,அவள் போராளியாக இருந்து புனர்வாழ்வின் பின் வெளிநாடுசென்று அங்கு வாழ்பவள்,அவளுக்கும் உடலில் உள்ள காயங்களால் வீட்டோடயே இருப்பவள்,அரசாங்கத்தின் உதவித்தொகையில் வாழ்பவள் என் நிலையறிந்து தன் செலவை குறைத்து 10.000 ரூபா பணம் அனுப்பியிருந்தாள் அந்த நல்ல உள்ளம்கொண்டவள்,
அப்பணத்தில்தான் இன்று என் கணவனிற்கு பிடித்த உணவுகள் வாங்கிப்போகிறேன்,இரண்டு சறம்.இரண்டு சேட்டு,பிறஸ் சிக்னல்.என் கணவனிற்கு பிடித்த இறைச்சிப்பொரியல்,அத்தோடு போனமுறை போகேக்க தன்னிடம் பாட்டா இல்லை பாத்றூம் போகும்போது மற்ற கைதிகளிடம்தான் வாங்கிப்போவதென்று பாட்டா வாங்கித்தரச்சொல்லி கேட்டிருந்தான்,
என் நிலையறிந்து 18 வருட சிறைவாழ்க்கையில் என் காதல் கணவன் என்னிடம் கேட்ட ஒரே ஒரு பொருள் இந்த பாட்டாதான்.சிறையில் மூன்று வேளையும் சோறும் மீனும்தான்,எம்மோடு இருக்கும்போது இரவில் சோறு சாப்பிடமாட்டார். ஆனால் நான் என்ன பக்கத்திலா இருக்கிறன் சமைச்சிட்டு ஓடிப்போய் கொடுத்திட்டுவர...?எவளவு வலிகள்...?
இறுதியாக வவுனியாவிற்கு வழக்கை மாற்றி எடுக்க முனைந்து அப்பாவின் காணிபத்திரத்தை ஈடுவச்சு சட்டத்தரணிக்கும் என் போக்குவரத்துக்கும் செலவழிச்சன் ஆளும் வரேல. காணியும் இல்லாமல் போகும் நிலை,
என்னைப்போல ஒரு அபலைப்பெண்ணை நான் காணவில்லை என்றுதான் சொல்வேன்.
பக்கத்து சீற்றில் இருந்தவன் என் வலிகள் புரியாது தொடங்கினான் சேட்டைகள்விட.எம் வலிகள் அவர்களிற்குப்புரியாது ,அவர்களிற்கு அக்கணப்பொழுது சந்தோசமே முக்கியம்,ஆயிரம் கம்பளிப்பூச்சிகள் என் உடலை சூழ்ந்ததுபோல் இருந்தது,கதைகேட்டான் நான் ஓர்இரு பதிலோடு பேசாமல் இருந்தேன்,
அவனின் சேட்டைகளும் அதிகமாக பேசிவிட்டேன்,இப்படி ஒவ்வொரு தடவையும் கொழும்பு போய்வரும்போது நான் அனுபவிக்கும் துயர்கள் ஏராளம்,யாரிற்கு சொல்லி புரியவைய்க்க முடியும்..?
என் சிந்தனை எல்லாம் என் கணவனை பார்த்துவிட வேண்டும் என்பது மட்டுமே.என் கணவனை விடுதலைசெய்ய உதவும்படி கேட்ட அதிகாரம்படைத்த மேல்மட்டக்காறர் எல்லாம் மட்டமான சிந்தனையோடு கபட நோக்கோடே அனுகினார்கள்,என் கணவனிற்காக என்று சில கதைகளை நான் சகித்துகொண்டுபோனாலும் என் உடலை இன்னொருத்தனுக்கு பங்குபோட நான் விரும்பவில்லை,
அதனால் என் கணவனை வேறொருவர் உதவியோடு வெளியே எடுக்கும் முயர்ச்சியை கைவிட்டேன்,என் பிள்ளைகூட தகப்பனைபோல்தான் இன்றுவரை தனது ஆசை அம்மா அந்த பொருள் வாங்கித்தாங்கோ இந்தபொருள் வாங்கித்தாங்கோ என்று கேட்டதே இல்லை.
என் ஆசையெல்லாம் என் கணவன் விடுதலையாகி வந்ததும் என்ர பிள்ளையோடு பல இடங்கள் போகவேண்டும்,நாங்கள் இவளவுகாலமும் ஆசைப்பட்ட சாப்பாடுகள் வாங்கிச்சாப்பிடனும் ஆசைப்பட்ட உடுப்புகள் வாங்கிப்போடனும்
பாதி தேங்காய்க்கு வழியில்லாம நான் தேங்காய்பால்விடாத கறி சமைய்த்து பழகியதில் இருந்து நான் பட்ட அவமானங்கள் வேதனைகள் எல்லாம் புருசோத்மனிற்கு சொல்லி என் மனக்கவலை தீரும்வரை அழவேண்டும்,
18 வருடங்கள் என்னையம் மகனையும் பிரிந்துவாழும் என் கணவனைப்பார்க்க போகிறேன்,அவன் ஆசைக்காதலியாய் போகிறேன்,என் உயிர்கொண்ட என் கணவன் விடுதலையாகி எம்மோடு மகிழ்வாக வாழவேண்டும், என்னில் அன்புகொண்டோரே எனக்காக கடவுளிடம் மன்றாடுங்கள் உங்களிடம் கெஞ்சிக்கேட்கிறேன்.......

No comments

Powered by Blogger.