ஈழத்தமிழரை அழித்த கலைஞர் காலமானார்!

திமுக தலைவர் கலைஞர் இன்று மாலை 6.10 மணிக்குக் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று மாலை 4.30 மணிக்கு கலைஞரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை 6.40 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் இன்று மாலை 6.10 மணிக்குக் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம். மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சைகளைக் காவேரி மருத்துவமனை மருத்துவர்களும் செவிலியர்களும் அவருக்கு அளித்தும் அவரது முதுமையான உடல்நிலை சிகிச்சைகளை ஏற்கும் நிலையில் இல்லை.

இந்தியாவின் மிக உயர்ந்த தலைவர்களில் ஒருவரான கலைஞரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவரது குடும்ப உறுப்பினர்களோடும் உலகத் தமிழர்களோடும் எங்களின் துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் காலமானதையறிந்து தமிழகமே கண்ணீர்க் கடலில் தவித்துவருகிறது.
#Karunanidhi #KalaignarHealth #kauveryHospita   #Deth #India #Tamilnews #Breaking

No comments

Powered by Blogger.