அமைச்சர் மலிக்கை பதில் பிர­தமர் என்று அழைத்த ஜனா­தி­பதி!

அமைச்சர் மலிக் சம­ர­விக்­ர­மவை பார்த்து பதில் பிர­தமர் வரு­கின்றார் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நகைச்­சு­வை­யாக கூறி­யுள்ளார். இந்தச் சம்­பவம் நேற்று முற்­பகல் இடம்­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்தில் நடை­பெற்­றுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அமைச்­ச­ரவைக் கூட்டம் இடம்­பெற்­றது. அமைச்­சர்கள் சமுக­ம­ளித்­தி­ருந்த நிலையில் ஜனா­தி­பதி கூட்டம் இடம்­பெற்ற சபைக்கு வருகை தந்தார். அவ­ருக்கு பின்னால் அமைச்­சர் மலிக்­ ச­ம­ர­விக்­ரமவும் வருகை தந்­த­போது அவரைப் பார்த்தே பதில் பிர­தமர் வரு­கின்றார் என்று ஜனா­தி­பதி கூறி­யுள்ளார்.

ஜனா­தி­ப­தியின் கூற்றையடுத்து அமைச்­சர்கள் நகைச்­சு­வை­யாக சிரித்­துள்­ளனர்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வியட்நாமுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டுள்­ள­மையால் நேற்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பங்­கேற்­க­வில்லை

No comments

Powered by Blogger.