யாழ்.வலிகாமம் வடக்கு மக்களின் விபரங்களை திரட்டும் புலனாய்வாளர்கள்!

யாழ்.வலிகாமம் வடக்கு மயிலிட்டி துறைமுகம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பிப்பதற்காக ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா வருகைதரவுள்ள நிலையில் கரையோர பகுதிகளில் உள்ள மக்களிடம் புலனாய்வாளர்கள் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

மயிலிட்டித் துறைமுக புனரமைப்பு  பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 22 ஜனாதிபதி வருகைக்காக பாதுகாப்பு தீவிரம். இதற்காக காங்கேசன்துறை முதல் வலலாய் வரையான கரையோரம் வாழ் மக்கள் மற்றும் மீனவர்களிடம் புலனாய்வாளர்கள்,

பொலிஸாரினால் விபரங்கள் திரட்டப்படுகிறது. இதில் புனர்வாழ்வு பெற்றவர்களின் விபரங்கள் தனியாக சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.