கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாணசபையில் அஞ்சலி!

கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாணசபையில் 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டுள் ளது.வடமாகாண சபையின் 129வது அமர்வு இன்று
காலை ஆரம்பமான நிலையில் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி மறைவுக்கு வடமாகாணசபை இரங்கள் தெ ரிவிப்பதுடன் 2 நிமிட மெளன அஞ்சலியினை செலுத்துமாறு அவை தலைவர் சீ.வி. கே.சிவஞானம் அறிவித்தார்.

இதனையடுத்து 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கான அஞ்சலி உரைகளையும் நிகழ்த்தினர். இந்த உரை அமரர் மு.கருணாநிதியின் குடும்பத்தாருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

#jaffna   #northern  #provincial   #councial #karunanidi  #tamilnews #tamil  #c.v. sivaganam

No comments

Powered by Blogger.