ராஜாஜி அரங்கில் பதற்றம்.!2பேர் உயிரிழப்பு!

மேலும் நெரிசலில் சிக்கி 8 காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கிற்கு வரும் திமுக தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக போலீஸ் திணறி வருகிறது


திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஐபி வாசல் வழியாக புகுந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் லேசான தடியடி நடத்தப்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி செண்பகம் என்ற மூதாட்டி உட்பட 2 பேர் உயிரிழந்தனர். 

மேலும் நெரிசலில் சிக்கி 8 காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கிற்கு வரும் திமுக தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக போலீஸ் திணறி வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். இந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தற்போது நடந்து வருகிறது. காலையில் இருந்தே அரசியல் வாதிகள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் லட்சக்கணக்கில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். ஆனால் போலீஸ் எண்ணிக்கை மிகவும் குறைவான அளவிலேயே இருக்கிறது. சாரைசாரையாக வரும் மக்கள், தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறி வருகின்றனர்.
போலீஸ் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. விஐபி வாசல் வழியாக புகுந்த கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் சிறியதாக தடியடி நடத்தினர். இந்த கூட்டத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 
#Kalaignar-    #karunanidhi   #RIPKalaingar     #rajaji-hall       #death   #india  #Tamilnadu #tamilnews
Powered by Blogger.