ஐ.நா. கூட்­டத்தை தவிர்க்க தீர்­மானம்; பிர­தமர் இம்ரான்!

பாகிஸ்­தானின் புதிய பிர­தமர் இம்ரான் கான் தனது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில்
கவனம் செலுத்­து­வ­தற்­காக எதிர்­வரும் மாதம் நடை­பெ­ற­வுள்ள  ஐக்­கிய நாடுகள்  பொதுச் சபையின்  கூட்­டத்­தொ­டரில் கலந்­து­கொள்­ளா­தி­ருக்க தீர்­மா­னித்­துள்­ள­தாக  அந்­நாட்டு வெளி­நாட்டு அமைச்சர் சாஹ் மெஹ்மூத் குரேஷி  தெரி­வித்தார்.
இந்­நி­லையில் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 18  ஆம் திகதி  ஆரம்­ப­மா­க­வுள்ள ஐக்­கிய நாடுகள்  பொதுச் சபையின்  73  ஆவது கூட்­டத்­தொ­டரில்   இம்­ரான்­கா­னுக்குப் பதி­லாக சாஹ் மெஹ்மூத் குரேஷி  தலை­மை­யி­லான தூதுக் குழு­வொன்று கலந்துகொள்­ள­வுள்­ளது.
“பிர­தமர் அந்தக் கூட்­டத்­திற்கு செல்­ல­மாட்டார்.  நான் அங்கு செல்லும் பாகிஸ்தானிய குழுவிற்கு தலைமை தாங்குகிறேன்”  என சாஹ் மெஹ்மூத் குரேஷி   ஊடகவியலாளர் கூட்டமொன்றில் கலந்து கொண்டு  உரையாற்றுகையில் கூறினார்.
பாகிஸ்தானின் புதிய பிரதமர் நாடு எதிர்கொண்டுள்ள  பொரு ளாதார நெருக்கடிகள் குறித்து  கவனமெடுக்க நாட்டில் தங்கியி ருப்பாரா  அல்லது  ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் கலந்துகொள் வாரா  என்ற விவாதமொன்று பாகிஸ்தானில் நிலவுகின்ற நிலையி லேயே பிரதமரின் மேற்படி தீர்மானம் தொடர்பான அறிவிப்பு  வெளி யாகியுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.