பிரிட்டனில் தாம்பத்தியம் இன்றி குழந்தை பெற்ற அதிசய ஜோடி!

இங்கிலாந்தில் நர்தம் பெர்லேண்ட் பகுதியை
சேர்ந்த ஜோடி கெர்ரி ஆலன்-அலி தாம்சன். கடந்த 2014-ம் ஆண்டு இவர்கள் 2 பேரும் ஒரு உணவகத்தில் சந்தித்தனர். பின்னர் இவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தனர். அதே நேரத்தில் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளாமல் குழந்தை பெற முடிவு செய்தனர்.
அதுகுறித்து இணைய தளத்தில் தேடினர். அப்போது தான் ‘டர்கி பாஸ்டர்’ முறையின் மூலம் குழந்தை பெற முடியும் என தெரியவந்தது. அதன்பின்னர் 3 பவுண்டு (ரூ.300) செலவில் ஊசி ஒன்றை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கினர். அதன் பின்னர் ஊசியில் எடுக்கப்பட்ட அலி தாம்சனின் விந்தணுவை கெர்ரி ஆலனின் கர்ப்பபையில் செலுத்தினர்.
இப்படி 4 முறை செய்த போது அவர் கர்ப்பம் அடையவில்லை. தொடர்ந்து 5-வது முறை செய்தபோது கர்ப்பம் அடைந்தார். அதை தொடர்ந்து கடந்த மே 23-ந்தேதி இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கெர்ரி ஆலன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். குடும்ப வாழ்வில் அதிகம் கஷ்டப்பட்டதால் திருமண வாழ்வில் அவருக்கு உடன்பாடு இல்லை. அலி தாம்சன் ஓரின சேர்க்கையாளர் என்பதால் திருமணம் செய்ய விரும்பவில்லை.
எனவே தான் ‘டர்கி பாஸ்டர்’ முறையில் குழந்தை பெற்றனர். இந்த முறையில் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வீட்டிலேயே செயற்கை முறையில் கருத்தரித்து குழந்தைபெற முடியும்.

No comments

Powered by Blogger.