அடுத்த பட அறிவிப்பை விரைவில் வெளியிடும் விஜய்!

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் படம் சர்கார்.
கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். அரசியல் கதையாக உருவாகும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. விறுவிறுப்பாக இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நடந்துவந்தன.
படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், அக்டோபர் 2-ம் தேதி ஆடியோ வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகளுக்குக்கான படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து விட்டது.
ஒரு படத்தில் தனது பங்களிப்பு முடிந்த உடன் தனது அடுத்த படம் பற்றி அறிவிப்பது விஜய் பாணி. எனவே விஜய், தான் நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவலை விரைவிலேயே வெளியிட அதிகமான வாய்ப்புள்ளது. சர்கார் இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக வெளிவர உள்ளது. 

No comments

Powered by Blogger.