வவுனியாவில் கைக்குண்டு மீட்பு

வவுனியாவின், இன்று பிற்பகல் வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மடுக்கந்த குளத்தில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது, குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மடுக்கந்த பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், குளத்தின் அபிவிருத்திப்பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனை அடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் நீதிமன்ற அனுமதியைப்பெற்று கைக்குண்டை செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Powered by Blogger.