நடிகை பூர்ணாவுக்கு சிபாரிசு செய்த மம்முட்டி!

‘ஒரு குட்டநாடன் பிளாக்’ என்ற படத்தில் நடிக்க நடிகை பூர்ணாவுக்கு நடிகர் மம்முட்டி சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது.
மலையாள நடிகையான பூர்ணா தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து தமிழில் பல படங்களில் நடித்தார் பூர்ணா. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படம் ‘சவரக்கத்தி’.
இந்தப் படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அதற்கு முன் ‘கொடிவீரன்’ படத்தில் மொட்டையடித்துக் கொண்டு ஹீரோவுக்கு வில்லனாக நடித்திருந்தார் பூர்ணா.
தற்போது பூர்ணா, மம்முட்டி ஹீரோவாக நடித்து வரும் ‘ஒரு குட்டநாடன் பிளாக்’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் பூர்ணா நடிக்க நடிகர் மம்முட்டிதான் சிபாரிசு செய்தாராம். மேலும் அவருக்கு ஊக்கமும் கொடுத்துள்ளார்.

‘கொடிவீரன்’ படத்திற்காக மொட்டை போட்டது இந்தப் படத்தில் போலீஸ் கேரக்டருக்கு வசதியாக இருந்தது என்று நடிகை பூர்ணா கூறியுள்ளார். 
Powered by Blogger.