இலங்கையில் தமது கண்ணை இழந்த அமெரிக்க பெண் ஊடகவியலாளர் உண்மைக் கதை திரைப்படமாகவுள்ளது!

2001 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி இலங்கையில் தமது கண்ணை இழந்த அமெரிக்க பெண் ஊடகவியலாளர் மேரி கொல்வினின் உண்மைக் கதை திரைப்படமாக வெளிவரவுள்ளது.

மிக விரைவில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் முன்னோடிக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் பிரவேசிக்கும் போதே மேரி கொல்வின் காயமடைந்து தனது கண்ணை இழந்தார்.

இதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த சிரியாவுக்குள் அனுமதியின்றி பிரவேசித்த வேளையில், அவர் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், அவரின் உண்மைக் கதை ‘த பிரைவேற் வோர்’ என்ற தலைப்பில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.