அர­சி­யல் பின்­ன­ணியே குள்ள மனி­தர்­கள் என்­பது இல்­லாத விட­யம்!

அராலி, வட்­டுக்­கோட்­டைப் பகு­தி­க­ளில் குள்­ள­ம­னி­தர்­க­ளால் தாம் தாக்­கப்­ப­டு­கின்­றோம் என்று அந்­தப் பகுதி மக்­கள் கூறு­வது பொய் என்­றும் அப்­படி இல்­லாத விட­யங்­க­ளைப் பத்­தி­ரி­கை­கள் பிர­சு­ரிப்­ப­தற்கு அர­சி­யல் பிண்­ண­ணி­கள் இருக்­கும் என்று பொலி­ஸார் நம்­பு­கின்­ற­னர். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி. விக்­னேஸ்­வ­ரன் நேற்­றுத் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ் மா அதி­பர் றொசான் பெர்­னாண்டோ, யாழ்ப்­பாண மாவட்­டப் பிர­திப் பொலி­ஸ்மா அதி­பர் பாலித பெர்­னாண்டோ, உள்­ளிட்ட பொலிஸ் அதி­கா­ரி­க­ளைச் சந்­தித்­துப் பேசிய பின்­னர் செய்­தி­யா­ளர்க­ளி­டம் இத­னைத் தெரி­வித்­தார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர்.யாழ்ப்­பா­ணத்­தில் அக­ரித்­து­வ­ரும் குற்­றங்­கள் தொடர்­பில் ஆராய்­வ­தற்­காக இந்­தச் சிறப்­புச் சந்­திப்பு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

சந்­திப்­பின் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கருத்­துத் தெரி­வித்த விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­த­தா­வது:

பத்­தி­ரி­கை­யில் பல விட­யங்­கள் கூறப்­பட்­டி­ருப்­பது தொடர்­ப­பா­கப் பொலி­ஸா­ரி­டம் கேட்­கப்­பட்­டது. குள்­ள­ம­னி­தர்­கள் வந்­தார்­கள் என்று நேரில் கண்­ட­வர்­கள் ஒரு­வ­ரா­வது இல்லை. ஒரு­வ­ரா­வது வந்து நான் கண்­டேன் என்று சொல்­ல­வில்லை.

முறைப்­பா­டு­கள் வழங்­கு­வ­தற்கு யாரும் முன்­வ­ர­வு­மில்லை. இதற்கு அர­சி­யல் பின்­ன­ணி­கள் இருப்­ப­தா­கவே கூறப்­ப­டு­கி­றது. பத்­தி­ரி­கை­கள் இல்­லாத விட­யங்­களை வெளி­யி­டு­வ­தற்கு அர­சி­யல் பிண்­ண­ணி­கள் இருக்­கும் என்று பொலி­ஸார் நம்­பு­கின்­ற­னர்.

இந்­தச் சந்­திப்­பில் மணல் கடத்­த­லைத் தடுப்­பது, போதைப் பொருள் பாவ­னை­யைக் கட்­டுப்­ப­டுத்த எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­கள், வீதி விபத்­துக்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு மேற்­கொள்­ள­வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் எனப் பல­வி­ட­யங்­க­ளும் பேசப்­பட்­டது என்­றும் முத­ல­மைச்­சர் தெரி­வித்­தார். சந்­திப்­பில் வடக்கு மாகாண அமைச்­சர்­க­ளான அனந்தி சசி­த­ரன், க. சசர்­வேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரும் கலந்­து­கொண்­டி­ருந்­த­னர்.

வடக்கு மாகாண சபை­யின் தற்­கா­லிக அமைச்­சர்­க­ளான நால்­வ­ருக்­கும் இந்­தச் சந்­திப்­புக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­ட­போ­தும் ஏனைய இரு­வ­ரும் கலந்­து­கொள்­ள­வில்லை என்­றும் முத­ல­மைச்­சர் தெரி­வித்­தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.