யாழில் 50 பேர் கைது பொலிஸார் அதிரடி வேட்டை!

யாழ் குடாநாட்டில் போதைப்பொருட்கள் பாவனை, வாள்வெட்டு சம்பவம் மற்றும் வீடுகள் மீதான தாக்குதல்கள் என பல குற்றச்செயல்களில் பெயரில் கடந்த சில நாட்களில் மட்டுமே 50 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், யாழில் தவறான செயல்களில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் சில குழுக்களின் இளைஞர்களே அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு, அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இவ்வாறு யாழில் தொடரும் வன்முறை சம்பவங்கள் காரணமாக பொலிஸார் பல்வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.