கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்புக்கு கடும் சாட்டையடி என்ன??(காணொளி)

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கடந்த தேர்தலில் பின்னடைவை எதிர்நோக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் முன்னுக்குப் பின் முரணான வகையில் கருத்துக்கள் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்மக்களுக்குச் செய்யக் கூடிய அத்தனை விடயங்களையும் செய்வதாக ஒரு புறம் சொல்லி வரும் அதேவேளை தங்களுடைய வாயாலேயே தாங்கள் கடந்த காலத்தில் செய்துள்ள அனைத்துத் தவறுகளையும் ஒப்புக் கொள்ளும் நிலைமைக்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தள்ளப்பட்டுள்ளது எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை(07-08-2018) பிற்பகல் யாழ்.கொக்குவிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கணடவாறு தெரிவித்துள்ளார்.
#Jaffna  #kajenthirakumar  #kajenthiran  #TNPF #press_Meeting  #Tamilnews  #Tamil

No comments

Powered by Blogger.