போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொத்துவில் கனகர் கிராமத்து மக்கள்!

அம்பாறை - பொத்துவில் கனகர் கிராமத்து மக்களினால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட நில மீட்புப் போராட்டம் 3ஆவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இரவு பகல் பாராமல் கலந்து கொள்கின்றதாக ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் எம். குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.

நாம் எமது நில மீட்புப் போராட்டத்தை ஆரம்பித்து மூன்று நாட்கள் கடந்துவிட்டன. ஆனால் எமது பிரச்சினைகள் தொடர்பாக எந்த அரச அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ கண்டுகொள்ளவில்லை. எமது பிரச்சினைக்கு தீர்வும் கிடைக்கவில்லை ஆனால் எமது போராட்டத்தை நாம் கைவிடப்போவதில்லை என போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கூறியுள்ளனர்.

நாங்கள் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் இவ்விடத்தில் எமது உரிமைகளை கேட்டு நிற்கின்றோம்.

ஆனால் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எமது போராட்டத்தை, தீர்வு கிடைக்கும்வரை நாம் நிறுத்தப் போவதில்லை என இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என போராட்ட ஏற்பாட்டுக்குழுவின் செயலாளர் எம்.குழந்தைவேல் குறிப்பிட்டுள்ளார்.

#pothuvil #kanakar #tamilnews

No comments

Powered by Blogger.