மாங்குளத்தில் வாகன விபத்தில் இருவர் பலி!

முல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்  இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கெப்ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்

முல்லைத்தீவு - மாங்குளம், வெள்ளாங்குளம் வீதியின் கல்விளானுக்கும், கனேச புறத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வெள்ளாங்குளத்திலிருந்து மல்லாவி நோக்கிப்பயணித்த மோட்டார் சைக்கிளும், மல்லாவியிலிருந்து வெள்ளாங்குளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கெப் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

மாந்தைகிழக்கு விநாயக புரம் ஒட்டங்குளத்தைச் சேர்ந்த 28 வயதான அந்தோணி சுரேஸ் மற்றும் 25 வயதான எஸ்.புனிதகுமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான விசாரணைகளை முழங்காவில் மற்றும் மல்லாவிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


#Mankulam, #Sri Lanka  mullitivu  

No comments

Powered by Blogger.