சந்­து­ருக்­கொண்­டான் படு­கொலை 28 ஆவது ஆண்டு நினை­வேந்­தல்!

மட்­டக்­க­ளப்பு, சத்­து­ருக்­கொண்­டான் படு­கொலை நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் நேற்­றுக் கிழக்கு மாகா­ணத்­தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை அமர்­வி­லும் நேற்று உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.

1990 செப்­ரெம்­பர் 9ஆம் திகதி சத்­து­ருக்­கொண்­டான், பிள்­ளை­யா­ரடி, கொக்­கு­வில் பகு­தி­க­ளைச் சேர்ந்த 184 அப்­பா­வித் தமிழ் மக்­களை இலங்கை இரா­ணு­வ­மும், அத­னோடு இருந்த ஆயு­தக் குழுக்­க­ளும் இணைந்து படு­கொலை செய்­தி­ருந்­தன. அந்­தப் படு­கொ­லை­யின் 28ஆவது ஆண்டு நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் நேற்று நடை­பெற்­றன.

சத்­து­ருக்­கொண்­டான் கிரா­மம் மட்­டக்­க­ளப்பு நக­ருக்கு அருகே அமைந்­துள்­ளது. 1990 செப்­ரெம்­பர் 9 ஆம் திகதி மாலை 5.30 மணி­ய­ள­வில், சீருடை அணிந்த இரா­ணு­வத்­தி­ன­ரும், மற்­றும் சில ஆண்­க­ளும் கிரா­மத்­தி­னுள் நுழைந்து கிராம மக்­கள் அனை­வ­ரை­யும் வீதி­யில் கூடு­மாறு பணித்­த­னர். அவர்­கள் அனை­வ­ரும் அரு­கில் உள்ள இரா­ணுவ முகா­மிக்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

விசா­ர­ணை­கள் முடிந்த பின்­னர் அவர்­கள அனை­வ­ரும் விடு­விக்­கப்­ப­டு­வர் என உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது. எனி­னும் அவர்­கள் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. அங்­கி­ருந்த தப்­பி­ய­வர்­க­ளின் சாட்­சி­யப்­படி அவர்­கள் அனை­வ­ரும் கொல்­லப்­பட்­ட­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

படு­கொ­லைச்­சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­களை நடத்­த­வென இரு விசா­ரணை ஆணைக்­கு­ழுக்­கள் நிய­மிக்­கப்­பட்­டன. ஓய்­வு­பெற்ற நீதி­பதி கே. பால­கிட்­ணர் இந்த விசா­ர­ணை­களை நடத்­த­வென அப்­போது ஆட்­சி­யி­லி­ருந்த பொது­ஜன ஐக்­கிய முன்­னணி அர­சால் நிய­மிக்­கப்­பட்­டார்.

நீதி­பதி தனது அறிக்­கை­யில் படு­கொலை நிகழ்ந்­த­தற்­கான வலு­வான சாட்­சி­யங்­கள் இருப்­ப­தா­க­வும் குற்­ற­வா­ளி­க­ளுக்­கெ­தி­ரான கடும் சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார். ஆனால் இது­வரை இவ்­வா­றான சட்ட நட­வ­டிக்­கை­களோ, விசா­ர­ணை­களோ மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகத் தக­வ­லெ­து­வும் இல்லை.

#batticollo   #tamilnews  #srilanka  
Powered by Blogger.