நல்லெண்ண அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் 360 டன் கோதுமை அன்பளிப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராக
ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொது இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களின் மூலம் கொத்து கொத்தாக மக்களை கொன்று குவிக்கின்றனர்.
அண்டைநாடான ஆப்கானிஸ்தானுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்றிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கோதுமை அனுப்புவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில், நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அனுப்பிவைத்த 360 டன் கோதுமையை தோர்காம் எல்லைப்பகுதியில் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் பெற்று கொண்டனர்.
Powered by Blogger.