இலங்கை வந்த இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

பிரித்தானிய கடவுச்சீட்டினை பயன்படுத்தி இலங்கைக்கு வந்த இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரான் நாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவருமே, கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

65 வயதான ஈரான் நாட்டு தாய் மற்றும் 37 வயதான மகளும் GF- 138 என்ற விமானத்தில் பஹ்ரேனில் இருந்து இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.

குறித்த இருவரும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் தங்கள் கடவுச்சீட்டை வழங்கியுள்ளனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர்கள் பிரித்தானிய நாட்டவர்கள் அல்ல என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டைச் சேர்ந்த இவர்கள் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இருவரின் பயணப் பையை சோதனையிட்ட போது அவர்களிடம் ஈரான் கடவுச்சீட்டுகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடு ஒன்றில் குடியுரிமை பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த இருவரும் இலங்கை விமான நிலையத்தை வந்தடைத்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#Bandaranaike   #International   #Airport   #tamilnews  #ü.k  #womean

No comments

Powered by Blogger.