அரச பேரூந்து பணிப்புறக்கணிப்பு நிறைவு!

வேதன முரண்பாடுகள் உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை
முன்வைத்து மாகாணங்கள் சிலவற்றில் முன்னெடுக்கப்பட்ட அரச பேரூந்து பணிப்புறக்கணிப்பை நிறைவு செய்ய தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று பிற்பகல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது , தொழிற்சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றான 2006 ஆம் ஆண்டின் 30ம் இலக்க மேலாண்மை சுற்றறிக்கை படி இலங்கை போக்குவரத்து சபையின் சம்பள கட்டமைப்பை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் செயற்படுத்த போக்குவரத்து அமைச்சர் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.