கோட்டாவிற்கு இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏழு பேர் மீதான வழக்கு தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையானது இன்று (வெள்ளிக்கிழமை) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடைக்கால தடையுத்தரவு நீட்டிக்கப்பட்டது.

மேலும் குறித்த உத்தரவிற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் மறுப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதன் மனுவை எதிர்வரும் 19 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு முறைப்பாட்டாளர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பிலான நிதி மோசடி வழக்கு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏழு பேருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் டில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்கவினால் கொழும்பு நீதவான் நிதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி காரணமாக அரசாங்கத்திற்கு 1,140 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#gotabaya  #srilanka  #tamilnews  #colombo

No comments

Powered by Blogger.