யாழில் திலீபனின் நினைவேந்தல் பலதரப்பட்ட தடைகளை தான்டிஏற்பாடுகள் பூர்த்தி!


31 ஆவது ஆண்டு நினைவு நாளுக்கான ஏற்பாடுகள குறித்து முன்னாள் போராளிகள்
, துயிலுமில்ல நடவடிக்கையில் ஈடுபடுவோர், பல்கலைக்கழக சமூகத்தினர் ,ஊடகவியலாளர்கள் அடங்கலாக உள்ள தமிழ் உணர்வாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

திலீபன் நினைவு நாள் நிகழ்வுகள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.        
                                                                     மாவீரர்                             குடும்பத்தைச் சேர்ந்த மாறன் அவர்களின் ஒருங்கிணைப்பில்  நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளின் முதன்மைச் சுடரை தீவகத்தைச் சேர்ந்த இரு மாவீர்ர்களின் தந்தையும் மூத்த போராளியுமான ஒருவர் ஏற்றுவார். தொடர்ந்து அங்கு சமுகமளித்துள்ள ஏனைய மாவீரர்களின் பெற்றோர்கள் ஈகைச்சுடர்களை ஏற்றுவார்கள். தொடர்ந்து தியாகி திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்படும்.                             
                                                                               தொடர்ந்து தியாகி திலீபனையும் தமிழரின் விடுதலை போராட்ட வரலாற்றில் ஆகுதியாகிய மாவீரர்களையும் பொதுமக்களையும் நினைவு கூரும் வகையில் அகவணக்கம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெறும். 

அந்த இடத்தின் புனித்த்தைப பேணும் வகையில் எவரது உரையும் அங்கு இடம்பொறாது.                                              
                                                                      திலீபனின் நினைவை பகிரவிரும்பும் அல்லது தமது உணர்வினை உலகுக்கு உரைக்க ஆர்வமுள்ளவர்களுக்காக நல்லூர் மேற்கு வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான எண்ணம் உடையோர் இதில் இணைந்து கொள்ளலாம்.         
                                                                                     கடந்த வருடம் மாவீர்ர் நாளுக்கு முன்னதாக எமது எதிர்பார்ப்புகளுக்கு இலங்கை தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மதிப்பளித்திருந்தார்.

வடகிழக்கில் உள்ள அனைத்து துயிலுமில்லங்களிலும் முற்றிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் இந்நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக ஒழுங்காக நடைபெற்றிருந்தன.        
                                                                                                   அதுபோலவே இவ்வருட திலீபன் நினைவுநாள் தொடர்பாக விடுத்த வேண்டுகோளுக்கும் அவர் மதிப்பளித்திருந்தார். இந்த முன்மாதிரியை அனைவரும் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

மேலும் எமது வேண்டுகோளுக்கு மதிப்பளித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், ஐனநாயகப் போராளிகள் கட்சியினர், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் அனைவருக்கும் எமது நன்றிகளென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.