கண்டி – கலஹாவில் 7 பேர் அதிரடி கைது

கண்டி – கலஹா பகுதியில் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாகக்
கொண்டு அமைதியின்மையை தோற்றுவித்த குற்றச்சாட்டின் கீழ் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
கண்டி – கலஹா பகுதியில் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலையின் சொத்துக்கள் மீது சேதம் விளைவித்த சம்பவம் கடந்த வாரம் பதிவாகியிருந்தது.
இவ்வாறு அமைதியின்மையை தோற்றுவித்த சம்பவம் தொடர்பிலேயே குறித்த 7 சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்படாத பட்சத்தில், நாடு தழுவிய ரீதியில் பணிப் பகிஷ்கரிப்பொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தகக்து.

No comments

Powered by Blogger.