கொடிகாமம்-இராமாவில் பகுதியில் விபத்து வயோதிபர் பலி!

கொடிகாமம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது. இன்று காலை 5 மணியளவில் கொடிகாமம் இராமாவில் பகுதியில் சிறிய ரக உழவு இயந்திரத்தின் மீது ஹயஸ் வாகனம் மோதியுள்ளது.

இதன்போது க.விக்னேஷ்வரன் (வயது-65) என்ற முதியவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து கொடிகாம ம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் விபத்தினை ஏற்படுத்திய ஹயஸ் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.