16 ஆண்டுகளுக்கு பிறகு கடவுள் கொடுத்த வரம்!

மாங்கல்ய பல்லாக்கு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் பாலா பாஸ்கர்.

திருச்சூரிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது ஓட்டுநரின் கவனக்குறைவால் கார் சாலையோர மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது.

இதில் அவரது இரண்டுவயது குழந்தை தேஜஸ்வினி உயிரிழந்தது.

இசையமப்பாளர் பாலாபாஸ்கர் மற்றும் அவரது மனைவி லட்சுமி படுகாயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதில், மனைவி ஆபாய கட்டத்தை தாண்டிவிட்டார், ஆனால் பாலா பாஸ்கருக்கு பலத்த அடிபட்டிருப்பதால் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

பாலா பாஸ்கருக்கு திருமணமாகி 16 ஆண்டுகளாக குழந்தை இல்லை. குழந்தை ஆசையில் இருந்த இந்த தம்பதியினருக்கு 16 ஆண்டுகள் கழித்து தேஜஸ்வினி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து பாலாவின் நெருங்கிய நண்பர் பெரோஸ் கூறியதாவது, தனது மகள் தான் உலகம் என நினைத்து வாழ்ந்துகொண்டிருந்தார் பாலா. திருமணமாகி குழந்தை இல்லை. சிகிச்சைக்கு பிறகே தேஜஸ்வினி பிறந்தார்.

இது கடவுள் கொடுத்த வரம் என பாலா அவ்வப்போது கூறுவார். ஆனால் அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. தனது ஆசை மகள் இறந்துவிட்டார் என்பது தெரியாமல் சுயநினைவின்றி இருக்கிறார். இதனை நினைத்து பார்க்கையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

அவர் விரைவில் குணம்பெற்று வரவேண்டும். தற்போது குழந்தையின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டுள்ளது. பாலா பாஸ்கருக்கு சுயநினைவு வந்தவுன் இறுதிசடங்கு மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.