பாரீஸ் ஓட்டலில் சவுதி அரேபியா இளவரசியின் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை!

சவுதி அரேபியாவை சேர்ந்த இளவரசி ஒருவர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ‘ரிட்ஸ்’ என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார்.
இந்தநிலையில் அவர் தங்கி இருந்த ஆடம்பர அறையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அறையில் வைத்திருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
அவற்றின் மதிப்பு ரூ.7 கொடி (9 லட்சத்து 30 ஆயிரம் டாலர்) என மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த ஓட்டலில் இந்த ஆண்டில் மட்டும் 2-வது தடவையாக கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
கடந்த ஜனவரியில் இந்த ஓட்டலுக்குள் உள்ள கடைகளில் இருந்து ஒரு கும்பல் ரூ.4 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.