தமிழமுதம்..!

வீசும் தென்றல் காற்றுக்குள்
பேசும் சங்கீத நாதமது தமிழ்.
மோதும் வண்ணத் துளிகளுக்குள்
சிலிர்க்கின்ற உணர்வூற்றுத் தமிழ்.
பொங்கும் ஆழ்கடல் நுரைகளுக்குள்
பா இசைக்கும் பண்ணிசைத் தமிழ்.
வீழ்கின்ற நதியூற்று அருவிக்குள்
முடிவில்லாத் தொடரூற்றுத் தமிழ்.
வனத்துச் சோலைகளின் கதகதப்பில்
எம்மாவீரர் புகழ் பாடும் தமிழ்.
குளத்துத் தாமரை மலர்களுக்குள்
பதுமையாய் படர்ந்திருக்கும் தமிழ்.
வானவில்லின் ஏழுவண்ண விழிகளுக்குள்
நாணமுள்ள பண்பான தமிழ் - நீ
அமுதாய் அழகாய் அன்பாய்
எத்திக்கும் எதிரொலிக்கும் வாய்மைத்தமிழே

கூவும் குயிலோசை கானங்களுள்
தேன் இனிமையாய் ஓங்குகின்ற தமிழ்.
ஆடும் மயிலினத்தின் எழில்களுக்குள்
அழியாத வண்ணமான தமிழ்.
பேசும் பெண்மையின் விழிகளுக்குள்
பல காலம் வாழும் எங்கள் தமிழ்.
இளம் காளையர் புயங்களின் பலத்தினுள்ளே
பார் போற்றுகின்ற வீரமான தமிழ்.
போர்க் களமுனை மரணத்தின் பிடியிலும்
புறமுதுகிடா வீறுகொண்ட தமிழ்.
சேய் உதரத்து பால்மணத்தில் வீசுகின்ற
தெவிட்டாத நறுமணமுள்ள தமிழ் - நீ
அமுதாய் அழகாய் அன்பாய்
எத்திக்கும் எதிரொலிக்கும் வாய்மைத்தமிழே

**தமிழ் நதி ***

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.