வரம் தாராயோ....!

மொழியால்  இதயமதை  வீழ்த்தி
 விழியால் கதை  பல கூறி வழிதனை
காட்டி வலிதனை  தந்து மொழியின்றி போனவளே !

பேசிடும் காற்றாய் வீழ்ந்து
மடியினில் மழலையாய் தவழ்ந்து
உயிரினில் உணர்வாய் கலந்து
ஊற்றில்லா  உறவாய்  உதிர்ந்தாய்
 என்னவளே!

அலையாய் மேனிதனில் மோதி
அறுகாய் மனதில் படர்ந்து
மெழுகாய் இதயமதை உருக்கி
மெல்ல மெல்ல கொன்றிடும்
நினைவுகளை தந்தெனை
 வென்றவளே!

தூரமதை பரிசாக தந்து
சென்ற பூமகளே என் பாமகளே !
நின் பாதமதை சரணடைய இதயமது
இடம் மாறி துடிக்கிறது! இனித்திடும்
மொழிதனில் கனிந்தே  கருவாகிய
காதலை தாயன்பில் இசைத்திட
சேயாக நான் மாற வரம் தாராயோ!..

கவிப்பிரியை சுஜனி

No comments

Powered by Blogger.