தினமும் "ஜாக்கிங்" போக "ட்ரை"

உலகமே நகர மயமாக மாறிக்கொண்டிருக்கும் நிலைமையில, "உடல் உழைப்புனா..! அது எந்த கடைல விக்குது..?" ன்ற அளவுக்கு தான் நம்ம பார்க்குற வேலையும் இருக்குது.
முறையான சாப்பாடும் இல்ல, வியர்வை சிந்தி உழைக்கிற வேலையும் இல்ல, ஆனா, உடம்பு மட்டும் ஆரோக்கியமா இருக்கணும். எப்புடிங்க இது ஒர்க் அவுட் ஆகும்? சரி, ஜிம்முக்கு போறதால உடலை ஃபிட்டா வச்சுக்கலாம்னு ஆசைப்பட்டாலும், ரெண்டு நாளைக்கு மேல அந்தப் பக்கம் தலைவச்சுக் கூட படுக்கிறது இல்ல.

இந்த லிஸ்ட்ல அடுத்த இடத்துல "ஜாக்கிங்" இருக்கு. உண்மையாவே, தேகத்தின் மேல் அதிக அக்கறை கொண்டிருக்கும் ஆரோக்கியவான்களுக்குத் தான் இந்த டிப்ஸ்..

* ஜாக்கிங் செய்ய ஆரம்பிச்ச முதல் நாள்லயே மூச்சுத் திணற, திணற ஓடணும்னு அவசியம் இல்ல. முதல் 2 நிமிஷம் ரிலாக்ஸா நடங்க, அடுத்த 2 நிமிஷம் மெதுவா ஓடுங்க, அப்புறம் நடங்க. இந்த நிமிட கணக்கை கொஞ்சம், கொஞ்சமா இன்கிரீஸ் பண்ணுனாலே போதும்.

* ஓடும் போது உடம்பை "வெறப்பா" வச்சுக்காம கை, கால், தோள் பட்டைலாம் தளர்வா வச்சுக்கோங்க. * கால்களை ரொம்ப தூரத்துக்கு எடுத்து வச்சு ஓட வேண்டாம். அப்படி பண்றதால, மூட்டு பகுதிகள்ல அழுத்தம் அதிகமாகி வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா மருத்துவர்கள் சொல்றாங்க.

* நல்ல பாடல்கள் கேட்டுகிட்டே பயிற்சி செய்றதால, அந்த நாள் முழுதும் சிறப்பாவும் இருக்குமாம்.

* இந்த பயிற்சியை தொடர்ந்து செய்யணும்கூட அவசியம் இல்ல. ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்றதால கூட உடலில் உள்ள கலோரிகள் அளவு சீராக இருக்குமாம். ஒரு நாளைக்கு 7 மணி நேர தூக்கம், கரெக்ட் டைம்க்கு சாப்பாடு, கொஞ்சமா உடற்பயிற்சி இது போதும்..உங்க வாழ்க்கை இனிமையா இருக்கும்..


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.