யாழ். வடமராட்சியில் கத்தி வெட்டில் முடிவடைந்த கருத்து மோதல்

யாழ்.வடமராட்சி கிழக்குப் பகுதியில் நேற்றைய தினம்(15) நிகழ்வொன்றில் ஏற்பட்ட கருத்து மோதல் இறுதியில் கத்திவெட்டில் முடிவடைந்துள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

திருமண வைபவம் இடம்பெற்ற வீடொன்றில் நேற்றுப் பிற்பகல் இரு நபர்களுக்கிடையில் மதுபோதையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. கருத்து மோதல் பின்னர் இருவருக்கிடையிலான கைகலப்பாக மாறியுள்ளது.

இந்நிலையில் கைகலப்பில் தாக்குதலுக்கு உள்ளான நபர் நேற்று நள்ளிரவு வேளையில் தன்னைத் தாக்கியவரின் வீட்டிற்குள் உள்நுழைந்து தாக்கிய நபருக்கும், அவரது மகனுக்கும் கத்தியால் குத்திப் படுகாயப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கத்திக் குத்துக்கு இலக்கான இருவரும் சிகிச்சைகளுக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.