யாழில் பொலிஸ் அதிகாரிகள் நிலைமை அத்துமீறியது!

யாழ். வடமராட்சியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளி மாவட்ட மீனவர்களை விடுவிக்காவிட்டால் விசேட அதிரடிப்படையினரை களமிறக்கப் போவதாக அங்கு வந்த காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். வடமராட்சி கடற்பரப்பில் இன்று காலை அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட வெளி மாவட்ட மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்து, மாவட்ட மீனவ சங்கத்திணைக்களத்தில் வைத்துள்ளார்கள்.

இவர்களை பொறுப்பில் எடுப்பதற்காக வந்த பருத்தித்துறை பொலிஸாரிடம் குறித்த மீனவர்களை அனுப்புவதற்கு வடமராட்சி மீனவர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.


இதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இவர்களிடம் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தியும், அது தோல்வியடைந்த நிலையில் வடமராட்சி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்திருந்தனர்.

நிலைமை அத்துமீறி சென்ற நிலையில் குறித்த இடத்திற்கு, காங்கேசன்துறை துறை பொலிஸ் அத்தியட்சகர் வருகைத்தந்துள்ளார்.


இவர், வடமராட்சி மீனவர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளி மாவட்ட மீனவர்களை விடுவிக்காவிட்டால் விசேட அதிரடிப்படையிரை களமிறக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளி மாவட்ட மீனவர்களை பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனால் மேலும் குழப்பம் அதிகரித்ததுடன் பொலிஸ் மற்றும் அப்பகுதி மீனவர்களுக்கிடையே முரண்பாடுகளும் ஏற்பட்டுள்ளது.


இதேவேளை தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு வெளி மாவட்ட மீனவர்களில் ஆறு பேரை பொலிஸார் பலவந்தமாக மீட்டுச் சென்றுள்ளனர்.

ஏனைய இரண்டு பேரையும் பொலிஸாரால் மீட்க முடியவில்லை. இதனையடுத்து அங்குள்ள அருட்தந்தை ஒருவர் மூலமாக ஏனைய இரண்டு பேரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை அங்கு நின்ற அப்பகுதி மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் பலரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

#jaffna  #police   #

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.