ஓவியா கொழும்மில் பிரபல நகை மாளிகையை திறந்து வைத்து ரசிகர்களுடன் கூத்தாட்டம்!(படங்கள் )

இலங்கைக்கு குறுகிய கால சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்த தென்னிந்தியாவின் பிக் பொஸ் எனும் நிகழ்ச்சியின் மூலம் உலகளவில் பிரபலமான ஓவியா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஓவியாவுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் இன்று நகைக் கடை ஒன்றை திறந்து வைப்பதற்காகவே ஓவியா இலங்கைக்கு வந்துள்ளார்.
இதன்போது இலங்கையில் இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என தான் நினைத்துப் பார்க்கவில்லை எனவும், தனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும் ஓவியா தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கைக்கான இந்த விஜயம் தமக்கு இரண்டாவது பயணம் எனவும் ஓவியா தெரிவித்துள்ளார்.மேலும் ஓவியாவை பார்ப்பதற்காக தலைநகரில் பெருந்திரளான மக்கள் கூடியுள்ளதுடன், செல்ஃபி எடுப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
கொழும்பு செட்டியார் தெருவில் கணேஷா ஜுவல்லர்ஸ் எனும் பெயரில் நிர்மாணிக்கப்பட்ட புத்தம் புதிய நகை மாளிகையை  ஓவியா இன்று திறந்து வைத்தார்.  கொழும்பு  மாநகரிலும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள ஓவியாவின் ரசிகர்கள் திரண்டு வந்து ஓவியாவை வரவேற்றனர்.    அந்த வகையில், இன்று காலை செட்டியார் தெருவுக்கு வந்த ஓவியாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

No comments

Powered by Blogger.