பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி வரை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட சாட்சியங்களாக மேல் நீதிமன்ற பதிவாளர் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலை ஆணையாளர் ஆகியோரிடம் இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

விளக்கமறியலில் உள்ள இரண்டாம் சந்தேக நபரான பிரதீப் மாஸ்டர் அனுப்பிய கடிதம் தொடர்பில் இன்று விசாரணைகள் நடைபெற்றன.கடந்த ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் அடிப்படையிலான சாட்சியங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி வாய்மூல சமர்ப்பணங்களுக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.