இலங்கை பொலிஸ் குழு சீன மொழி கற்க சீனவிற்கு விஜயம்!

இலங்கையில் சீன சுற்றுலாப் பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு உதவும் வகையில், இலங்கை பொலிஸார் சீன மொழி கற்க சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கற்கைகளுக்காக இலங்கை பொலிஸ் குழு ஒன்று பீஜிங்கிற்கு கடந்த வாரம் சென்றுள்ளது.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொலிஸார் சீன கல்விக்காக தேர்வு செய்யப்பட்டனர். பொலிஸாரின் அடிப்படைச் சீன மொழி அறிவு, நாட்டில் உள்ள சீனர்களுக்குப் பெரிதும் உதவும் என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் சுற்றுலா சந்தையில் சீனா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. இவ்வாண்டில் தற்போது வரை சுமார் ஒரு லட்சத்துக்கு 90 ஆயிரம் சீனர்கள் இங்கு பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.