பாலியல் தொந்தரவு கொடுத்த இராணுவச்சிப்பாய்களிற்கு தர்ம அடி!

மக்கள் குடியிருப்புக்குள் இரவுவேளைகளில் புகுந்து தனித்திருக்கும் பெண்களிற்கு பாலியல் தொந்தரவு புரிந்துவந்த இலங்கை இராணுவ சிப்பாய்கள் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
பூநகரி கரியாலைநாகபடுவன் கணேஸ் குடியிருப்பு பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் இரவுவேளைகளுள் புகுந்து தொந்தரவு புரிந்த இராணுவ சிப்பாய்களே மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு தர்ம அடிக்குள்ளாகியுள்ளனர்.

இன்றைய தினம் அதிகாலை 3.00 மணியளவில் இரண்டு இராணுவ சிப்பாய்கள் ஆண்களற்ற வீடொன்றினுள் புகுந்த வேளை அவ்வீட்டார் சத்தமிட கிராம மக்கள்; இராணுவத்தினரை மடக்கிப்பிடித்துள்ளனர்.அவர்கள் இருவரும் பின்னராக  முழங்காவில் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினர் தொடர்ந்தும் இவ்வாறாக மக்கள் குடியிருப்புக்கள் வருகைதந்துள்ளனர்.இது தொடர்பில் படை அதிகாரிகளிற்கு பல தடவை தெரியப்படுத்தியபோதும் அதனை நிராகரித்துவந்துள்ளனர்.

இன்றைய தினம் கையும் மெய்யுமாக அகப்பட்டுள்ள படைச்சிப்பாய்கள்; காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மக்கள் குடியிருப்புக்குள் இரணுவமுகாம்கள் இருப்பதால் தமிழ் மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனரென வடக்கு முதலமைச்சர் பல தடவைகள் சுட்டிக்காட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


#poonari    #jaffna  #killinochi   #srilanka   #army  
Powered by Blogger.