ராஜபக்ச குழுவினர் தமக்கான சவக்குழியை தாமே தோண்டினர்!

ராஜபக்ச குழுவினர் தமக்கான சவக்குழியை தாமே தோண்டி கொண்டனர் என இளைஞர் விவகார மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்கட்சியின் நேற்றைய ஆர்ப்பாட்டம் தொடர்பில் இன்று(வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

‘கொழும்பில் கூட்டு எதிரணியினர் நடத்திய போராட்டம் புஷ்வாணமாகிவிட்டது. ராஜபக்ஷ குழுவினர் தமக்கான சவக்குழியை தாமே தோண்டி கொண்டனர்.

போராட்டம் தோல்வி கண்டமையினால் கூட்டு எதிரணியினரின் செயற்பாடுகள் அனைத்தும் நகைச்சுவையாக மாறியுள்ளது.

கூட்டு எதிரணியினர் தற்போது தாம் செய்த நிதி மோசடிகளுக்கு நஷ்டஈடு செலுத்தும் நோக்கில் விசேட நீதிமன்றத்துக்கு முகங்கொடுகக தயாராக வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.