விக்னேஸ்வரன் எந்த அபிவிருத்தி திட்டத்தினையும் முன்னெடுக்கவில்லை!

தமிழ்மக்களை தூண்டுவதை மாத்திரமே விக்னேஸ்வரனால் செய்ய முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரன் குறிப்பிடத்தக்க பாரிய அபிவிருத்தி திட்டமொன்றையும் முன்னெடுக்கவில்லை அவரால் அப்பாவி தமிழ் மக்களை தூண்டிவிட மாத்திரமே முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தியாகங்கள் காரணமாகவே விக்னேஸ்வரனால் பதவி வகிக்க முடிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து வருடங்களாக விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவிவகிக்கின்ற போதிலும் அவர் எந்த அபிவிருத்தி திட்டத்தினையும் முன்னெடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.