உலகின் மிகப்பெரிய மொபைல் ஷோரூம் இந்தியாவில்!

சாம்சங் நிறுவனம் தனது உலகின் மிகப்பெரிய ஷோரூமை இந்தியாவின் திறந்துள்ளது.
உலக அளவில் பிரபலமான மதிப்புமிக்க மொபைல் ஆப்பிள்தான் என்றாலும், வணிக சந்தையில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டு முன்னணியில் இருப்பது என்னவோ சாம்சங் நிறுவனம்தான். ஏற்கெனவே உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையத்தையும் சாம்சங் நிறுவனம் இந்தியாவில்தான் அமைந்திருக்கிறது. தற்போது உலகின் மிகப்பெரிய ஷோரூமையும் சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அமைத்துள்ளது. பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஷோரூமானது சுமார் 33,000 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது.
சாம்சங் நிறுவனம், இந்தியாவுக்கென்றே பிரத்யேகமாக தனது தயாரிப்புகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகின்றது. இந்திய சந்தை என்பது மொபைல் போன் சந்தையில் மிகப்பெரியது என்பதாலும் இங்கு போட்டி அதிகம் என்பதாலும் இந்தியாவில் தனது தயாரிப்புகளை வெளியிடுவதில் சாம்சங் நிறுவனம் அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
மிகப் பிரம்மாண்டமான இந்த ஷோரூமை சாம்சங் நிறுவனத்தின் ஆசிய பிரிவு தலைவர் தலைமையேற்று திறந்துவைத்தார். சாம்சங் நிறுவனத்தின் ஆரம்பகால மாடல்கள் முதல் அண்மைக் காலத்தில் அறிமுகமான மாடல் வரை அனைத்து வகையான மொபைல்களும் தனித்தனியாக அலங்காரமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற பிரம்மாண்டமான ஷோரூம்களை மேலும் 10 நகரங்களில் தொடங்கவிருப்பதாக அந்நிறுவனத்தின் இந்தியத் துணைத் தலைவர் மோகன் தீப் சிங் கூறியுள்ளார்.
Powered by Blogger.