தமது இருப்பை தக்கவைத்து கொள்ளும் ஜனாதிபதி!

தமது இருப்பை தக்கவைத்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருகின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  சி. சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசியல் கைதிகளின் விடையம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தாலும் அதற்கான அரசாங்கத்தின் பதில்கள் திருப்திகரமானதாக இருக்கவில்லை என்பதே வெளிப்படையான உண்மை.

நீதி அமைச்சர் கூறியிருக்கிறார் சட்ட ரீதியாகவே அதனை தீர்கவேண்டும் என்று. உண்மையில் அவர்கள் மீது முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் பொய்குற்றசாட்டுகள். அவர்களை துன்புறுத்தி, மிரட்டி பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்தி பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே வழக்குகள் தாக்கல் செய்யபட்டருக்கின்றது.

அவர்கள் தங்களிற்கு ஏற்றவாறாக வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர். அது நீதிக்கு புறம்பானது எனவே பயங்கரவாத தடைசட்டம் நீக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கபட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு .

பேரினவாத கட்சிகள் தேர்தலை சந்திக்கும் நிலைப்பாட்டிலேயே தற்போது இருக்கிறார்கள். அதனால் இந்த கைதிகளின் விடுதலை பெரும் சிக்கலிற்குள்ளாகியுள்ளது.

சர்வதேச விசாரணை இலங்கைக்கு தேவையில்லை, உள்நாட்டு விசாரணையே பொருத்தமானது என ஜனாதிபதி கூறியுள்ளார்.

உண்மையில் சர்வதேச விசாரணையை தமிழர்கள் கோரி வரும் நிலையில் அது இறுக்கமான ஒரு நிலையை அடைந்திருக்கிறது. எனவே அந்த நிலையை குலைப்பதற்காக ஐனாதிபதி முற்பட கூடும். அவரது அரசியலை நிலை நிறுத்துவதற்காக எடுக்க கூடிய நடவடிக்கையாகவே அவர் உள்நாட்டு விசாரணையை கோருகின்றார் என நாம் நினைக்கின்றோம்.

அவர்கள் தமது நிலைப்பாபாடுகளை மாற்ற முனைந்தால் ஐநா பாதுகாப்பு சபை வரை அந்த வியத்தை கொண்டு செல்லும் கடப்பாடு சர்வதேச நாடுகளிற்கு இருக்கின்றது“ என தெரிவித்துள்ளார்.

#sivamohan  #mullathivu #srilanka #tamilnews

No comments

Powered by Blogger.