இராவணன் தமிழன் இல்லையாம் -சுப்பரமணியன் சுவாமி!

இராவணன் ஒரு தமிழனே அல்ல. அவர் இந்தியா உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் பிறந்தவர் என்று சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கூறியது போல், இராவணன் திராவிடர் அல்ல. அவர் உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அருகேயுள்ள, பிஷ்ரக கிராமத்தில் பிறந்தவர்.

வட இந்தியர்கள் ஆரியர்கள், தென்னிந்தியர்கள் திராவிடர்கள் என்னும் கருத்து, இந்தியர்கள் மனதில் ஆங்கிலேயரால் திட்டமிட்டு விதைக்கப்பட்டது.

தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் இறுதியில், இராவணன் கொடும்பாவியை எரித்து, வடஇந்திய மக்கள் கொண்டாடுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.