நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சாமி தரிசனம்!

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக `வட சென்னை', ‘மாரி-2’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கிறது. தனுஷ் படத்தின் படப்பிடிப்பு நெல்லை, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை 6.30 மணியளவில் நடிகர் தனுஷ், துணை நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினர் நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் இன்று காலை ‘‘சுவாமி திருப்பள்ளி எழுச்சி’’ சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் தனுஷ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பிறகு நடிகர் தனுஷ் நெல்லையப்பர் கோவிலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சுற்றி பார்வையிட்டார். நடிகர் தனுஷ் கோவிலுக்கு வந்தது பற்றிய தகவல் அறிந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இதனால் அசம்பாவிதம் ஏற்படாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதை தொடர்ந்து தனுஷ், நெல்லையப்பர் கோவிலில் இருந்து, படப்பிடிப்பு நடக்கும் தென்காசிக்கு புறப்பட்டு சென்றார். இது தனுஷ் இயக்கி நடிக்கும் படம் என்றும், மாரி-2 படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

No comments

Powered by Blogger.