மன்னாா் கட்டுக்கரை குளம் மற்றும் மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக்கு 1000 மில்லியன்!

மன்னார் மாவட்டத்தின் இரு முக்கிய பிரச்சணைகளாக உள்ள கட்டுக்கரைக் குளம் மற்றும் மாவட்ட வைத்தியசாலை என்பனவற்றின் அபிவிருத்திக்காக உடனடியாக ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கித் தர வேண்டும். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

மன்னார் மாவடத்தில் வனமாக்கல் தேசிய நிகழ்ச்சித் திட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில் குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்துகொண்டிருந்தார். இதல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்ட கோரிக்கைகளையும் விடுத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
மன்னார் மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிக மக்கள் வாழும் நிலையில் இந்த மாவட்டத்தில் எந்தவொரு தனியார் வைத்தியசாலைகளுமே கிடையாது. அதனால் அனைவருமே அரச வைத்தியசாலையினை மட்டுமே நாட முடியும். அந்த வகையில் இந்த மாவட்ட மக்களின் வைத்தியத் தேவையை பூர்த்தி செய்யவுள்ள மாவட்ட வைத்தியசாலைக்கு 
ஓர் வெளிநோயாளர் வசதி இன்றுவரை கிடையாது. இதனை அமைப்பதானால் 450 மில்லியன் ரூபா தேவையாகும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோன்று இந்த மாவட்டத்தில் வாழ்பவர்களில் அதிகமானோர் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். 
அவர்களின் அந்த விவசாயத்திற்கு மாவட்டத்தின் மிகப் பெரும் குளமான கட்டுக்கரை குளமே உறுதுணையாகவுள்ளது. இந்த கட்டுக்கரை குளத்தின் கீழ் 160ற்கும் மேற்பட்ட சிறிய குளங்களும் உள்ளன.்இதுவரை அரச இயந்திரம் இந்த சிறிய குளங்கள் புனரமைப்பில் கவனம் செலுத்தியுள்ளனர்.
 இருப்பினும் தாய்க் குளமான இந்த கட்டுக்கரைக் குளத்தில் பாரிய புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு ஆகவேண்டிய தேவை உள்ளது. அந்தப் பணிக்காகவும் 550 மில்லியன் ரூபா பணம் தேவைப்படுகின்றது. எனவே மாவட்ட மக்களின் தேவை கருதி ஜனாதிபதி உடன் கவனம் செலுத்தி 2019ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 
குறித்த ஆயிரம் மில்லியன் ரூபா பணத்தையும் ஒதுக்கித் தர வேண்டும். என இந்த மாவட்ட மக்களின் சார்பில் உள்ள கோரிக்கையாக முன்வைக்கின்றேன் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.