மகன் மீது கொண்ட அதிகளவிலான பாசத்தினால் மகனை வழிபடும் பெற்றோர்!

மஞ்சள் காமாலையால் இறந்த மகனின் உருவச்சிலையை வீட்டில் வைத்து பெற்றோர் வழிபட்டு வருகின்ற சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் வேதசூகூர் கிராமத்தை சேர்ந்தவர் ஈரண்ணா. இவருடைய மனைவி ஈரம்மா. இந்த தம்பதிக்கு விஜயக்குமார் என்ற மகன் இருந்தார். 19 வயது நிரம்பிய நிலையில் விஜயக்குமார் மஞ்சள்காமலையால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார், விஜயக்குமாரின் இறப்பு ஈரண்ணா-ஈரம்மா தம்பதியை பெரிதும் பாதித்தது.

இந்த நிலையில், மகன் மீது கொண்ட அதிகளவிலான பாசத்தின் காரணமாக ஈரண்ணா, தனது மகன் விஜயக்குமாரின் உருவத்தை மனதில் வைத்து சிலையாக வடித்து வீட்டில் வைத்து தினமும் ஈரண்ணா-ஈரம்மா தம்பதி வழிபட்டு வருகிறார்கள்.

இச்சம்பவம் அனைவரையும் வியப்புக்குள்ளானதுடன் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.