எங்கே சென்றாலும் என் காதல் உனக்காக.!!

எங்கே சென்றாய்
என் காதலே
உன்னைத் தொலைத்த நானும்
உன் நினைவுகளும்
தனியாக தவிக்க
என்னை விட்டு எங்கே சென்றாய்

அன்று கரைபுரண்டோடும்
காட்டாற்று வெள்ளமாய்
அடித்துச் சென்றாய்
என் மனதை _ இன்று
தனித்துத் தவிக்கும் எனக்குள்
நித்தம் வருகிறாய்
அழியாத நினைவுகளாக
 என் கனவுகளில்

உன்னுடன் இருந்த பொழுதுகளில்
நாட்கள் கூட நிமிடமானது
நீ இல்லாத என் தனிமை
ஒரு நொடி நகர
பல காலமாவது ஏனோ

என் உயிருடன் உடலுமாய்
அணுவும் இல்லாமல்
நிரப்பிவிட்டேன்
உன் மீதான காதலை
நீ என்னை விட்டுப் போன பின்னும்
உன் நினைவுகள் என்னை விட்டு
கடக்க மறுக்கிறது
காலங்கள் கடந்தாலும்
காதலில் சுகமும் வலியும்
கடந்து போவதில்லை
என உணர்ந்தேன்
உன் உறவை இழந்தபின்
சிறகில்லாப் பறவையாக

விழியில் மயக்கம் தந்து
மாயாத காயத்தை
மனதில் விதைத்து
கொத்தடிமையாக்கி
கொத்திச் சென்றாய்
என் இதயத்தை
இன்னும் ........
எத்தனை காலம் கடந்தாலும்
 உயிரே
என் காதல் உனக்காக....

***ஜீவிதா ஜேர்மனி***

No comments

Powered by Blogger.