கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் ‘தேவ்’ திரைப்படம்

ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் ‘தேவ்’ திரைப்படம் அடுத்த கட்டப் படப்பிடிப்புக்களுக்காகத் தயாராகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் திரைப்படம் ‘தேவ்’.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் டப்பிங் வேலைகள் இன்று பூஜையுடன் தொடங்கியது. நாயகன் கார்த்தி முதல் நாளான இன்று டப்பிங் பேசி துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நாளை கார்த்தி மற்றும் படக்குழு குலு மணாலிக்கு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்வதுடன், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு 12 நாட்கள் குலுமணாலி மற்றும் இமய மலைகளில் தொடர்ந்து நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.