குப்பை வண்டியில் பயணித்த வவுனியா நகரசபை தவிசாளர்

வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் நகரசபையில் வாகனம் இல்லாத காரணத்தினால் குப்பை அள்ளும் வண்டியில் பயணித்த சம்பவம் ஒன்று இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகரசபை தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள வாகனமானது அடிக்கடி பழுதாகி விடும் நிலையில் இருக்கின்றமையினால் அலுவலக தேவை நிமித்தம் மாவட்ட செயலகத்திற்கு கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக நகரசபை தவிசாளர் குப்பை அள்ளும் வண்டியில் பயணித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இ.கௌதமன்,

வவுனியா நகரசபையினால் வழங்கப்பட்டுள்ள வாகனமானது பழுதடைந்துள்ளமையால் புது வாகனங்களை நகரசபைக்கு வழங்குமாறு பல தடவைகள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவித்துள்ள போதும் எமக்கு வாகனங்கள் வழங்கப்படவில்லை.


இதன் காரணமாக அலுவலக தேவைக்கு செல்வதற்கு பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியதாக உள்ளது. அத்துடன் வவுனியா நகரசபையின் பல்வேறு வேலைப்பிரிவுகளுக்கு ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையில் 14 ஊழியர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதுடன் நகரசபை தலைவர், செயலாளர், கணக்காளர், நகரசபை ஊழியர்களின் தேவைக்கென 4 வாகனங்கள் தேவையாக உள்ளன. எனவே இவற்றையினையும் உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.