உயிருக்கு போராடும் 15 வயது சிறுமியை காப்பாற்ற உதவுங்கள்

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் கூலித்தொழிலாளியின் 15 வயது மகளை காப்பாற்ற  https://www.edudharma.com/campaigns/save-mekala  என்ற இணையதளம் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் சேகர், மோகனாம்பாள் தம்பதியர். இவர்களுக்கு 15 வயதில் மேகளா எனும் மகள் உள்ளார்.  கூலித்தொழில் செய்து வரும் சேகர், மோகனாம்பாள் தம்பதியருக்கு குறைந்த அளவு வருமானமே கிடைத்தாலும் அதை வைத்து மனநிறைவோடு வாழ்ந்து வந்தனர்.

ஆனால், 6 மாதங்களுக்கு முன்னர் மேகளாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து தந்தை சேகர் அவருக்கு தேவையான மருந்துகளை வாங்கி கொடுத்தார். ஆனால், அதன் பின்னரும் காய்ச்சலின் தாக்கம் குறையாமல் சிறுமி மிகவும் சோர்வடைந்து, நலிவுற்றதால் தந்தை சேகர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் .
அங்கு சிறுமியின் ரத்தத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்தப்புற்று நோய் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும், மேகளாவை குணப்படுத்த ரூ.6 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தரப்பில் கூறியுள்ளனர்.

மிகவும் அமைதியாக, அனைவரிடமும் அன்பாக பழகும் சுபாவமுடைய தங்களின் ஒரே மகளுக்கு இத்தகைய கொடிய நோய் தாக்கியிருப்பதை அவரது பெற்றோரால் நம்பவே முடியவில்லை.

‘சிறுவர்களுக்கும் இது போன்ற நோய் தாக்குமா என்பது பற்றி இதுவரை நான் அறிந்திருக்கவில்லை. என் மகளுக்கு இது போன்ற கொடிய நிலை ஏற்படும் என கனவிலும் நினைக்கவில்லை. எனது ஒரே ஆசை மகளை காப்பாற்ற தேவையான முயற்சிகளை செய்து வந்தாலும் போதிய பணம் இல்லாததால் கையறு நிலையில் இருந்து தவித்து வருகிறேன்’ -  சிறுமியின் தந்தை சேகர்

கூலித்தொழில் செய்து வருவதால், சில அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கே போதிய பணம் இல்லாமல் ஏற்கெனவே அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியுள்ள நிலையில், மகளை காப்பற்ற போதிய நேரமும், பணமும் இல்லாததை நினைத்து அவரது பெற்றோர் மனமுடைந்து போயினர்.

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமி மேகளாவுக்கு இதுவரை மூன்று கட்டங்களாக கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு கீமோதெரபி சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட வேண்டும்.

உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் இவர்களின் ஒரே மகளின் வாழ்வை நீங்கள் செய்யும் உதவி மூலம் காப்பாற்ற முடியும். ஆன்லைன் மூலம் நிதி உதவி வழங்க விரும்புவர்கள் இந்த லிங்கை https://www.edudharma.com/campaigns/save-mekala பயன்படுத்தி பணம் செலுத்தலாம் அல்லது மருத்துவமனையை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் தொடர்புக்கு:-

எதுதர்மா (அறக்கட்டளை பதிவு எண்) 12 A: 1419(32)80-91 மற்றும் 80- G-1419(32)/CIT-1/CBE/08-09

எதுதர்மா,
ரத்னம் டெக்சோன்,
பொள்ளாச்சி மெயின் ரோடு,
ஈச்சனாரி,
கோயம்பத்தூர்,
தமிழ்நாடு- 641021
+919600111639
+919087766633

No comments

Powered by Blogger.