அமைச்சரின் 150 பில்லியன் வைப்பிலிடப்பட்ட கணக்கு முடக்கம்!

அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவின் வங்கிக்கணக்கில் 150 பில்லியன் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி அந்தப் பணத்தை முடக்கியதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என கூறினார்.

மேலும், தான் இது தொடர்பில் மத்திய வங்கியிடம் வினவிய போது இத்தகைய பணம் எந்தவொரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரின் வங்கிக் கணக்கிலும் வைப்பிலிடுவதற்காகக் கிடைக்கவில்லை என அவர்கள் கூறியதாக தெரிவித்தார்.

அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் சில இலத்திரனியல் ஊடகங்களிலும் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்திருந்தார்.

#மலிக் சமரவிக்கிரம  #மத்திய வங்கி  #பணம்  #இலத்திரனியல்  #malik   #samaravikirama #tamilnews #srilanka
Powered by Blogger.